hsCRP என்றால் என்ன? எதனால் அதிகம் ஆகிறது? எப்படி குறைப்பது?

Crp என்றால் என்ன?

C-Reactive Protein என்பதன் சுருக்கமே CRP.

இது எங்கிருந்து வருகிறது?

எப்போதெல்லாம் நமது உடலில் கிருமி தாக்கம் (infection) அல்லது, இன்ப்ளமேஷன் (inflammation) அதாவது உள் காயம் ஏற்படுகிறதோ அப்போது நமது கல்லீரல் மற்றும் வேறு சில செல்கள் சுரக்கும் பல acute phase reactants எனப்படும் புரதங்களில் ஒன்று தான் crp.

இதன் வேலை என்ன?

உடலில் எப்போது என்ன டேமேஜ் நடந்தாலும் நமது நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் செயல் கூறுகளில் வரும் இடை தரகர் தான் இந்த crp. இது அதிகமாக இரத்தத்தில் இருந்தால், உடலில் ஏதோ கிருமி தாக்கமோ அல்லது உள்காயமோ ஏற்பட்டிருக்கிறது என்று முடிவு செய்து கொள்ளலாம்.

நார்மலாக இது எவ்வளவு இருக்க வேண்டும்?

3 mg/dl எனும் அளவிற்கு கீழ் இருக்க வேண்டும்.

எவ்வெப்போது இது அதிகமாகும்?

Crp அதிகம் ஆக பல காரணங்கள் உள்ளன.

Infection – கிருமி தாக்கம். சாதாரண சளி காய்ச்சலில் இருந்து, தொண்டை வலி, சீழ் புண், நிமோனியா என எங்கு கிருமிகள் இருந்தாலும் crp பல மடங்கு உயர்ந்திருக்கும். (கிட்டத்தட்ட 100 mg/dl மேல் உயர்ந்திருக்கும்)

Chronic inflammatory states – நீண்ட கால மூட்டு வலி, முதுகு வலி போன்ற பிரச்சனைகள், ருமாட்டாய்டு ஆர்த்திரைட்டிஸ், சொரியாசிஸ், போன்ற ஆட்டோ இம்மியூன் நோய்கள், இருதய வால்வு பிரச்சனைகள், முதலியன. இவற்றில் crp 10 mg/dl மேல் உயர்ந்திருக்கும்.

தீ காயம், எலும்பு முறிவு, போன்ற காயங்கள்.

மாரடைப்பு(myocardial infarction), கணைய பாதிப்பு (pancreatitis), போன்ற உள்ளுறுப்பு பாதிப்புகள்.

தசை சிதைவு.

புற்று நோய்.

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து நோய்களிலும் crp குறைந்த பட்சம் 10 mg/dl எனும் அளவிற்கு மேல் உயர்ந்திருக்கும்.

High sensitive CRP என்றால் என்ன?

சாதாரண crp பரிசோதனையில் 6 mg எனும் அளவிற்கு கீழ் crp இருந்தால் அதை கண்டுபிடிக்க முடியாது. எனவே குறைந்த அளவு இருந்தாலும் கண்டுபிடிக்க உதவும் பரிசோதனை பெயர் தான் high sensitive crp. இது அதே crp தான். டெஸ்ட் தான் வேறு.

இது எங்கு அதிகம் ஆகும்?

மேலே கூறிய அனைத்து தொந்தரவுகளிலும் hscrp அதிகம் ஆகும்.
அத்துடன்,

புகை பிடிக்கும் பழக்கம்.
உடல் பருமன்.
மெட்டபாலிக் சின்ட்ரோம்
இருதயம் மற்றும் மூளைக்கு செல்லும் இரத்த குழாய்களில் உள்காயம்.
நீரிழிவு நோய்.
இவற்றிலும் hscrp அதிகம் ஆகும்.

ஆனால் இரண்டிற்கும் வித்தியாசம்.

இந்த பிரச்சனைகளில் எப்போதும் hscrp 10 mg மேல் ஏறாது.

Hscrp 10 mg மேல் இருந்தாலே அவற்றிற்கு காரணம், இருதய நோயோ உடல் பருமனோ அல்ல, 
மேலே கூறிய கிருமி தாக்கம், மூட்டு வலி, ஆட்டோ இம்மயூன் போன்றவைகளே.

இதை மிக தெளிவாக அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், ரிப்போர்ட் பார்த்து ஹார்ட் அட்டாக் தான் வரும்.
அவன் crp 3 mg மேலே இருந்தாலே high ரிஸ்க் என்று கொடுத்திருக்கிறான். 
>10 mg என்றால் கதை முடிந்தது என்று அர்த்தம் இல்லை.

வேறு என்ன காரணங்கள் என்று தேட வேண்டும்.
அல்லது சளி காய்ச்சல் போன்றவைகளால் crp அதிகம் ஆனதா என்று தெரிந்து கொள்ள hscrp பரிசோதனையை 3 வாரம் விட்டு திரும்ப எடுக்க வேண்டும்.

நம் குழு அன்பர் ஒருவரது குழந்தைக்கு சிறுநீர் infection உள்ளது என்றும் அதனால் crp அதிகம் ஆகியுள்ளது என்றும் மருத்துவர் தெரிவித்திருக்கிறார். ஆன்டிபயாடிக் மருந்து செலுத்த வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். அதற்கு அந்த அன்பர் என்னிடம் கேட்கிறார், பசு மஞ்சள் சாப்பிட்டால் crp குறைந்து விடுமா என்று!!

சரியாக புரிந்து கொள்ள வில்லை என்றால் இப்படி தான் ஆகும்.

Crp குறைய என்ன செய்ய வேண்டும்?

நல்ல உணவுமுறை.

நம் பேலியோ உணவுமுறை போன்று இயற்கையை ஒன்றி அமைந்த மாவுச்சத்து கம்மி உண்ணும் நல்ல உணவுமுறை hscrp ஐ குறைக்கும்.
உடல் பருமன் குறைத்தல். அதிலும் visceral fat எனப்படும் வயிற்று கொழுப்பை குறைதல் hscrpஐ நன்றாக குறைக்கும். அதுவும் நம் பேலியோவில் நடக்கும்.

சர்க்கரை நோய் கட்டுப்படுத்துதல். இதுவும் பேலியோவில் நடக்கும்.
புகை, மது விட்டொழிதல்.
மிதமான உடற்பயிற்சி.
பசு மஞ்சள்

கிருமி தாக்கத்தினால் crp அதிகம் ஆனால் அவற்றுக்குரிய மருந்துகள் எடுத்தால் மட்டுமே crp குறையும். நம் உணவுமுறையோ பசு மஞ்சளோ ஒன்றும் செய்யாது.

ஆட்டோ இம்மியூன் நோய்கள், மூட்டு வலி போன்ற நோய்களில் மருந்துகளுடன் நம் உணவுமுறையும் பசு மஞ்சளும் சேரும்போது பல பயன்களை அளிக்கும்.

பசு மஞ்சளின் வேலை என்ன? ஏன் அது நம் குழுவில் பரிந்துறைக்கப்படுகிறது?

பல தாவரங்களுக்கு anti inflammatory அதாவது உள் காயத்தை குறைக்கும் தன்மை உள்ளது. 
அதில் மிக முக்கியமான ஒன்று மஞ்சள். மஞ்சலிலுள்ள cucurmin எனும் மூல பொருளுக்கு, பல விதங்களில் anti inflammatory தன்மை உள்ளதாக பல ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இரத்த குழாய் சம்பந்தப்பட்ட உள்காயம், ஆட்டோ இம்மியூன் நோய்கள், osteoarthritis எனும் மூட்டு வலி போன்ற பல நோய்களுக்கு மஞ்சள் தீர்வளிக்கும் என்று ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளன.

https://www.ncbi.nlm.nih.gov/pubmed/17569207
https://www.ncbi.nlm.nih.gov/pubmed/17101300
http://www.ncbi.nlm.nih.gov/pubmed/21194249
http://www.ncbi.nlm.nih.gov/pubmed/21627399
இது மட்டுமில்லாமல் பல anti oxidant தன்மைகளும் உள்ளன.
http://www.ncbi.nlm.nih.gov/pubmed/23013352
http://www.ncbi.nlm.nih.gov/pubmed/16394323
http://www.ncbi.nlm.nih.gov/pubmed/20056736
http://www.ncbi.nlm.nih.gov/pubmed/19900435
Atherosclerosis எனப்படும் இரத்த குழாய் அடைப்பையும் மஞ்சள் கட்டுப்படுத்த வல்லது எனவும் ஆராய்ச்சிகள் உள்ளன.

எனவே தான் நம் குழுவில் crp அதிகம் இருப்பவர்களுக்கு பசு மஞ்சள் பரிந்துரைக்கப்படுகிறது.

ஏன் பேலியோ எடுக்கும்போது சிலருக்கு hscrp குறைவதில்லை அல்லது ஏறுகிறது?

மேலே கூறியுள்ளது போல பல்வேறு காரணங்களால் hscrp அதிகம் ஆகிறது. உடல் பருமன், இரத்த குழாய் உள்காயம், மெட்டபாலிக் சின்ரோம் ஆகிய காரணங்களால் hscrp அதிகம் ஆகியிருந்தால் மட்டுமே பேலியோவினால் குறையும். வேறு காரணங்கள் என்றால், தகுந்த மருத்துவரிடம் காண்பித்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

Hscrp நார்மலாக இருந்தால் எல்லாம் நன்றாக இருக்கிறது என்று அர்த்தமா?

இல்லை. Hscrp ஒரு marker. அவ்வளவே. மேகம் கறுத்து இருந்தால் மழை கட்டாயம் வரும் என அர்த்தம் இல்லை. இல்லை மேகமே இல்லை என்றாலும் மழை வராது எனவும் அர்த்தம் இல்லை. Hscrp போல் ஒவ்வொரு நோய்க்கும் நிறைய marker இருக்கும். அனைத்தையும் வைத்து பார்த்து, பொது உடல் ஆரோக்கியத்தையும் வைத்து பார்த்து மட்டுமே நோய் வரும் வாய்ப்புகளை கூற முடியும்.

சுருக்கமாக சொன்னால், hscrp என்பது தூரத்தில் ஒலிக்கும் சைரன் ஒலி போன்றது. அது போலீஸாகவும் இருக்கலாம், அம்புலன்சாகவும் இருக்கலாம், தீயணைப்பு வண்டியாகவும் இருக்கலாம், பக்கத்து வீட்டு குழந்தை விளையாடும் பொம்மையின் ஒலியாகவும் இருக்கலாம். எங்கிருந்து வருகிறது என்று ஆராய்ந்து பார்த்தால் தான் உண்மை தெரியும்.

இதுவே hscrp க்கு என் கோனார் உரை.

This Post Has 2 Comments

  1. Karthikeyan B

    Hs CRP- well explained!

  2. MUTHURAMAN

    அருமை

Leave a Reply