Books
BOOKS
60 வாரங்கள் வரை விகடனில் வெளிவந்து நிறைவுற்ற ஆரோக்கியம் ஒரு பிளேட் தொடரின் இரண்டாம் பகுதி “ஆரோக்கியம் ஒரு பிளேட் – பாகம் 2” எனும் பெயரில் இந்த புத்தகமாய் உருவெடுத்து இருக்கின்றது.
இதில் நமது பயணத்தை இன்னொரு பரிணாமத்திற்கு கொண்டு செல்லப் போகிறோம். பல்வேறு விதமான வாழ்வியல் நோய்களுக்கு உணவு முறை எப்படி ஆணிவேராக இருக்கின்றது, எப்படி உணவு முறை மாற்றங்கள் மூலம் இந்த வாழ்வியல் நோய்களை கட்டுக்குள் கொண்டு வருவது என்பது பற்றிய சூட்சுமங்களை பற்றி பேசப் போகிறோம். நாம் தினசரி வாழ்வில் பயன்படுத்தும் தயிர் மோர் முதல் டீ காபி வரை, பீட்ஸா பர்கர் முதல் பழைய சாதம் வரை, அவரைக்காய் முதல் அவகாடோ வரை, அஞ்சறைப்பெட்டி முதல் மைக்ரோவேவ் ஓவன் வரை, பேலியோ உணவுமுறை தொடங்கி விரத உணவுமுறை வரை, பாரம்பரிய உணவுகள் தொடங்கி மாடர்ன் உணவுகள் வரை, ஃபாஸ்ட் ஃபுட் முதல் பேக்கிங் செய்த உணவுகள் வரை என்று அனைத்தையும் அக்குவேராக ஆணிவேராக அலசப் போகிறோம்.
LINKS TO BUY
உணவுப் பொருள்களின் தன்மை, அந்த உணவுகள் நம் உடலுக்குத் தரும் நன்மை, தீமை என்பவை பற்றி விளக்கி ஆனந்த விகடனில் வெளியான `ஆரோக்கியம் ஒரு பிளேட்’ கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. ஒரே வார்த்தையில் நன்மை தீமை என்று பேசாமல், நாம் அன்றாடம் பயன்படுத்துகிற எல்லா உணவுப் பொருள்களையும் பகுத்தறிந்து, நவீன உணவுகள் மட்டுமல்ல, பாரம்பர்ய உணவுகள் குறித்த சாதக பாதகங்களையும் இந்த நூலாசிரியர் மருத்துவர் அருண்குமார் அவர்கள் சாமானியனுக்கும் புரியும் வகையில் விளக்கமாக எடுத்துரைத்துள்ளார். உணவு முறையில் தொலைத்த ஆரோக்கியத்தை மருந்துகளில் தேடிக் கொண்டிருக்கிறோம்.உங்கள் உணவுத் தட்டை ஆரோக்கியமாக மாற்றி, ஆனந்தமாக வாழ இந்த நூல் வழிகாட்டுகிறது!
LINKS TO BUY