*பேலியோ உணவுமுறை எடுப்பது ஏதாவது காரணத்தினால் நிறுத்திவிட்டால் நிறுத்திய/குறைத்த ஆங்கில/நவீன மருந்துகளை திரும்ப பழையபடி எடுக்க வேண்டுமா?*

வணக்கம்,

உங்களுக்கு தோல் அலர்ஜி(ஒவ்வாமை) பிரச்சனை இருக்கிறது என்று வைத்து கொள்வோம். என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆனால் தடிப்புகள் தினம் தினம் வந்த வண்ணம் உள்ளன.

ஒவ்வாமைக்காக தினம் அலர்ஜி மருந்து சாப்பிட்டு கொண்டிருக்கிறீர்கள்.

அலர்ஜி கட்டுப்பாட்டில் உள்ளது.

ஒகே.

திடீரென்று ஒரு நாள் அலர்ஜிக்கு காரணம் நீங்கள் தினம் விரும்பி சாப்பிடும் கடல் மீன் தான் என்று தெரிந்து விட்டது.

கடல் மீன் சாப்பிடுவதை நிறுத்தி விடுகிறீர்கள்.

அலர்ஜி சுத்தமாக நின்று விட்டது. தடிப்புகள் வருவதில்லை. 
உங்களுக்கு மிக்க சந்தோசம்.

அலர்ஜி மருந்துகளையும் நிறுத்தி விடுகிறீர்கள்.

அலர்ஜி திரும்ப வரவே இல்லை.
உடல் ஆரோக்கியமாக இருக்கிறது.

இப்போது, உங்கள் மனம் கொஞ்சம் அலைபாய ஆரம்பிக்கிறது.

பிரச்சனை இல்லை.
மருந்தும் இல்லை.

ஆஹா! அருமை!

திரும்ப கடல் மீன் சாப்பிட ஆரம்பிக்கிறீர்கள். 
மாத்திரையும் எடுப்பதில்லை.

*உங்களிடம் 3 கேள்விகள்:*

1. இப்போது திரும்ப ஒவ்வாமை / தடிப்பு வருமா வராதா?

2. ‎திரும்ப ஒவ்வாமை வந்ததற்கு காரணம் நீங்கள் மாத்திரை நிறுத்தியதா அல்லது கடல் மீன் சாப்பிட்டதா?

3. ‎கடல் மீன் சாப்பிடாமல் இருக்க முடியவில்லை, சரி. அட்லீஸ்ட் மாத்திரையாவது போட்டிருக்கலாம். போடாமல் இருந்தது யார் குற்றம்?

இந்த கேள்விகளுக்கான பதில்கள் பேலியோ உணவுமுறைக்கு பொருந்தும்.

ரெகுலர் மாவுச்சத்து உணவுகள் சாப்பிடும் போது,

BP (இரத்த அழுத்தம்), 
சுகர் (சர்க்கரை நோய்),
இருதய நோய்,
அதிக கொலஸ்டிரால்,

போன்ற மெடபாலிக் சின்றோம் (metabolic syndrome) நோய்களுக்கு பல மருந்துகளை உட்கொண்டு வருவீர்கள்.

பேலியோ உணவுமுறைக்கு வந்தவுடன்,
மாவுச்சத்து நிறுத்தியவுடன்,
பல பிரச்சனைகள் கட்டுக்குள் வருவதால், சில முக்கிய மருந்துகள்(இருதயம் சம்பந்தப்பட்டவை) தவிர்த்து, மற்ற மருந்துகளை நிறுத்த/குறைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

உங்கள் மருத்துவர் ஆலோசனையுடன் அவற்றை நிறுத்துகிறீர்கள்.

ஆஹா! அருமை!

மாத்திரை இல்லை, நோயும் இல்லை.

இப்போது, எல்லாம் சரி ஆகிவிட்டது என்றெண்ணி திரும்ப

4 இட்லி, கெட்டி சட்னி,
சாப்பாடு , உருளை பொடிமாஸ்,
மட்டன் பிரியாணி, கொத்து பரோட்டா,
முட்டை தோசை, சிக்கன் வறுவல்

எல்லாம் வெளுத்து கட்ட ஆரம்பிக்கிறீர்கள்.

அதாவது பேலியோவுக்கு முன்னர் கடைபிடித்த உணவுமுறையை விட மோசமான ஓர் உணவுமுறைக்கு செல்கிறீர்கள்.

மருந்தும் எடுப்பதில்லை.

*இப்போது அதே 3 கேள்விகள்:*

1. இப்போது திரும்ப சுகர் / BP ஏறுமா? ஏறாதா?

2. திரும்ப சுகர் / BP எறியதற்கு காரணம் நீங்கள் பேலியோவை விட்டதா? மாத்திரை சாப்பிடாமல் இருந்ததா?

3. பேலியோ ஏனோ கடைபிடிக்க முடியவில்லை, சரி. அட்லீஸ்ட் மாத்திரையாவது போட்டிருக்கலாம். போடாமல் இருந்தது யார் குற்றம்?

விடைகள் உங்களுக்கே தெரியும். 
நான் கூற தேவையில்லை.

நன்றி.

*மருத்துவர் அருண்குமார்,*
*குழந்தை நல மருத்துவர்,*
*ஈரோடு.*

This Post Has One Comment

  1. k.kandh

    எளிய விளக்கம் ..சூப்பர்.

Leave a Reply