பேலியோ உணவுமுறையும் டைப் 1 டயாபடீசும் | Paleo diet and type 1 diabetes

பேலியோ எனும் குறைந்த மாவுச்சத்து (low carbohydrate) உணவுமுறை பல்லாயிரக்கணக்கான நீரிழிவு நோயாளிகளின் வாழ்வினை மாற்றி வருவது அனைவருக்கும் தெரியும்.

பேலியோ உணவுமுறை பின்பற்றுவோர் பெரும்பாலும் டைப் 2 டயாபிடீஸ் எனப்படும் பெரியவர்களுக்கு வரும் நீரிழிவு வகை உள்ளவர்களே.

அதுக்கே ஆயிரம் பயமுறுத்தல்கள்,

கிட்னி சட்னி ஆகிடும்,
ஹார்ட் அட்டாக் வந்துடும், 
ஐ சி யு வில் அட்மிட் ஆக வேண்டியது தான்,
DKA போன்ற தீவிர பிரச்சனைகள் வந்துடும்,

என்றெல்லாம் பயந்து, டயட் ஆரம்பித்து நன்றாக சர்க்கரை அளவை குறைத்தவர்கள் கூட யாரோ சொல்வதை கேட்டுவிட்டு டயட்டை நிறுத்தியவர்கள் பல பேர்.

டைப் 1 டயாபடிஸ் என்றொரு நோய் உள்ளது. 
இது மிக தீவிர வகையை சேர்ந்த நீரிழிவு நோய். 
பெரும்பாலும் குழந்தைகளுக்கும் சிறு வயதினருக்கும் வரும். 
இன்சுலின் சுத்தமாக சுரப்பது நின்று விடும்.

இவர்கள் இன்சுலின் தினம் தினம் எடுத்தால் தான் உயிர் வாழ முடியும். வேறு மாத்திரை மருந்துகள் வேலை செய்யாது.

என்னிடமே பல டைப் 1 நீரிழிவு நோய் வந்த குழந்தைகள் பேஷண்டாக உள்ளார்கள். 
இன்சுலின் போட தயார் என்றாலும், அவர்களுக்கு சர்க்கரை அளவுகளை கட்டுபாட்டில் வைப்பது சிம்ம சொப்பனம் தான்.

அமெரிக்க டயாபடீஸ் சம்மேளனம் HBA1C எனப்படும் 3 மாத சர்க்கரை அளவுகளை 8 க்கு கீழ் வைக்க வேண்டும் என்று கூறுகிறது.

என் பேஷன்ட்களில் ஒரே ஒரு குழந்தைக்கு மட்டும் தான் இந்த அளவில் மெய்ண்டெயின் செய்ய முடிகிறது. பெரும்பாலான பேஷன்ட்களுக்கு HBA1C 10, 12 என்ற அளவுகளில் தான் இருக்கும். இதனால் சீக்கிரம் கண், சிறுநீரக பாதிப்புகள் இந்த குழந்தைகளை வந்தடைகின்றன.

இவர்கள் என்ன தான் இன்சுலின் போட்டாலும் சர்க்கரை அளவுகள் கட்டுப்பாட்டில் வராமல் இருப்பதற்கு காரணம் இவர்கள் எடுக்கும் மாவுச்சத்து அளவுகள் தான். இவர்களுக்கு பேலியோ போன்றதொரு குறைந்த மாவுச்சத்து உணவுமுறை மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும்.

ஆனால் ஆயிரக்கணக்கான டைப் 2 டயாபடீஸ், உடல் பருமன் போன்ற பிரச்சனைகளுக்கு பேலியோ எனும் குறைந்த மாவுச்சத்து உணவுமுறை பரிந்துரைக்கும் எனக்கே, இந்த டைப் 1 டயபடிஸ் குழந்தைகளுக்கு பேலியோ உணவுமுறை கொடுக்க சிறு பயம். ஆராய்ச்சிகள் சரியாக இல்லை, கொடுக்கலாமா வேண்டாமா என்று.

இந்த சூழ்நிலையில் படித்தேன் ஒரு ஆராய்ச்சி கட்டுரை.

அமெரிக்க குழந்தை நல சம்மேளனமான AAP – American Academy of Pediatrics (நம்ம ஆம் ஆத்மி பார்ட்டி இல்லீங்க), அவர்களின் ஆராய்ச்சி இதழான Pediatrics எனும் நூலில் வெளிவந்துள்ள ஆராய்ச்சி கட்டுரை.

குழந்தை நல ஆராய்ச்சியில் இதுவே உலகின் நம்பர் 1 அத்தாரிடி.

http://pediatrics.aappublications.org/content/pediatrics/141/6/e20173349.full-text.pdf

டாக்டர் பெர்ன்ஸ்டீன் எனும் மருத்துவர் பல காலமாக பல டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கும் குறைந்த மாவு உணவுமுறையை பரிந்துரைத்து வருகிறார். அவரே ஒரு டைப் 1 நீரிழிவு நோயாளி என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் எல்லாரும் ஒரு facebook குழுவில் இணைந்து சுய உதவியுடன் இந்த குறைந்த மாவு உணவுமுறையை பின்பற்றி வருகின்றனர். (அட, நம்ம ஆரோக்கியம் நல்வாழ்வு குழுமம் மாறி தாங்க )

இவர்கள் எல்லாரும் முட்டை , இறைச்சி, நட்ஸ் வகைகள், காய்கறிகள் சாப்பிட்டு, குறைந்த இன்சுலின் எடுத்து, அருமையாக சுகரை கட்டுப்பாட்டில் வைத்திருக்க, 
அமெரிக்க டயாபடிஸ் சம்மேளனம் (ADA) சொல்லும் ப்ரெட்டும் பன்னும் தின்னும் குழந்தைகள் பாவம் சர்க்கரை அளவை கட்டுபடுத்த முடியாமல் தவிக்க,

என்னடா செய்யறாங்க இவிங்க என்று எட்டி பார்த்திருக்கின்றனர் நம் ஆராய்ச்சியாளர்கள்.

வியத்தகு ஆச்சர்யங்கள் அங்கு காத்திருக்க – அதை அப்படியே முறையாக ஆராய்ச்சி ஆக்கி ஆராய்ச்சி கட்டுரையாக வெளியிட்டு விட்டார்கள்.

முக்கிய முடிவுகள் இதோ !!!

ஆராய்ச்சியில் பங்கு பெற்ற குழந்தைகள் – 312.

அவர்களின் சராசரி வயது – 11.

அவர்களின் சராசரி HBA1C வெறும் 5.67% (அம்மாடியோவ் !!!) 
(இட்லி தோசை தின்னும் டைப் 1 நீரிழிவு குழந்தைகளின் சராசரி HBA1C 8 முதல் 12 என்பதை நினைவில் கொள்ளவும்.)

அவர்களின் சராசரி இரத்த சர்க்கரை அளவு – 104 mg. (யப்பா !!!)

அவர்கள் எடுக்கும் மாவுச்சத்து ஒரு நாளைக்கு சராசியாக 36 கிராம். (கெத்து!!)
(அமெரிக்க டயாபடிஸ் சம்மேளனம் பரிந்துரைப்பது கிட்டத்தட்ட 200 முதல் 250 கிராம் )

தீவிர லோ சுகர் மற்றும் DKA எனப்படும் diabetic keto acidosis எனும் பிரச்னை ஒரு வருடத்தில் வந்தவர்கள் வெறும் “1” சதவீதம் தான். 
(மாவுச்சத்து உணவு சாப்பிடும் டைப் 1 நீரிழிவு குழந்தைகளுள் இந்த தீவிர லோ சுகர் , DKA பிரச்சனைகள் மிகவும் சகஜம் – பல்வேறு கணக்கீடுகள் படி கிட்டத்தட்ட 10 முதல் 15 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான உயிரிழப்புகள் கூட இதனாலேயே வரும்.)

அவர்களின் வளர்ச்சியும் மற்ற எல்லா குழந்தைகளை போல நார்மலாக உள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.

குழந்தைகளும் மிக திருப்தியாக ரசித்து சாப்பிடுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்கள்.

அப்புறம் என்னய்யா பிரச்னை.

சுகர் குறைஞ்சிடுச்சு.
சுகர்னால வர பிரச்சனைகள் குறைஞ்சிடுச்சு.
சுகர் மருந்து அளவு குறைஞ்சிடுச்சு.
பசங்களும் திருப்தியா சாப்பிடுறாங்க.

என்ன தான் ஆனாலும், ஒத்துக்க மாட்டோம். நீண்ட கால ஆராய்ச்சி வேண்டும் அப்டி இப்டின்னு மொக்கை போடாமல்,

டைப் 1 டயாபடிஸ்க்கு 
மாவுச்சத்து சுத்தமா குறைச்சு 
புரதமும் கொழுப்பும் சாப்பிடுறது தான்யா உருப்பட வழி 
என்று நெற்றி பொட்டில் அடித்த மாறி ஆராய்ச்சி முடிவை வெளியிட்டுள்ளார்கள் நம் ஆராய்ச்சியாளர்கள். 
(குழந்தைங்க டாக்டருங்க எல்லாம் ரொம்ப வெள்ளந்திங்க !!!)

நம்ம ஆளுங்க தான் நாம சொன்னா மதிக்க மாட்டாங்களே. வெள்ளைக்காரன் சொல்லிட்டான். அப்புறம் என்ன!

பேலியோனால டைப் 1 டயாபடிஸ் கே இந்த நிலைமை னா, டைப் 2 டயபடிஸ் ஐ எல்லாம் பேலியோ / குறைமாவு உணவு சுட்டு சின்னாபின்னமாக்கிடும் பாத்துக்குங்க.

மருத்துவர் அருண்குமார், 
குழந்தை நல மருத்துவர்,
கே எம் சி எச் மருத்துவமனை,
ஈரோடு.

Leave a Reply