ரொம்ப நாட்களாக பல மக்களும் மருத்துவர்களும் பேலியோ டயட் பற்றி கேட்கும் ஒரே கேள்வி,
“சார், நீங்கள் இவ்வளவு கொழுப்பு சாப்பிட சொல்கிறீர்கள், ஏதாவது மாரடைப்பு வந்து விடாதா?”
எந்த மருத்துவர்கள் மாநாட்டிற்கு சென்று பேலியோ டயட் பற்றிய பயன்களை எடுத்துரைத்தாலும், பூமராங் போல வரும் ஒரே கேள்வி,
“long term studies – நீண்ட கால ஆராய்ச்சி உள்ளதா?”
இதோ வந்தே விட்டது.
மருத்துவ ஆராய்ச்சியின் பைபிளாக கருதப்படும் lancet ஆராய்ச்சி நூலில் (29 august 2017) வந்துள்ள ஆராய்ச்சி கட்டுரை, பல கோடி மக்களின் வாழ்வினை புரட்டி போடப்போகிறது.
http://www.thelancet.com/journals/lancet/article/PIIS0140-6736(17)32252-3/fulltext
Prospective Urban Rural Epidemiology (PURE) என்று ஒரு ஆராய்ச்சி.
இந்தியா ஐரோப்பா நாடுகள் உட்பட 18 நாடுகள் (சென்னை உட்பட)
வளர்ந்த, வளரும் மற்றும் ஏழை நாடுகளை சேர்ந்த
ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் மக்கள்(1,53,996)
2003 முதல் 2013 வரை பத்து வருடங்கள்,
மக்கள் சாப்பிடும் உணவில், அவர்கள் எவ்வளவு மாவுச்சத்து(carbohydrates), எவ்வளவு கொழுப்பு(fats), எவ்வளவு புரதம் (proteins) எடுக்கிறார்கள், அவர்களுக்கு என்னென்ன நோய்கள் வருகின்றன, எவ்வளவு பேர் இறந்து போகிறார்கள் என்று “பத்து வருடங்கள்” தொடர்ந்து கண்காணித்து வெளிவந்துள்ள மாபெரும் ஆராய்ச்சி.
என்ன சொல்கிறது?
இருப்பதிலேயே அதிக கொழுப்பு உணவுகள் உண்டவர்களுக்கு குறைந்த கொழுப்பு உண்டவர்களை விட 23 சதவீதம் இறப்பு குறைவு.
இருப்பதிலேயே அதிக மாவுச்சத்து உண்டவர்களுக்கு குறைந்த மாவுச்சத்து உண்டவர்களை விட 28 சதவீதம் இறப்பு அதிகம்.
அதிக மாவுச்சத்து – மொத்த உணவில் 60 சதவீதம் மேல் மாவுச்சத்து மூலம் பெறுபவர்களுக்கு இருப்பதிலேயே அதிக சாவுகள் நிகழ்ந்துள்ளன. (நமது தென் இந்திய உணவில் 80 சதவீதம் மாவுச்சத்து😢)
அதிக saturated fat – நிறை கொழுப்பு (மாமிசம், நெய், வெண்ணெய், தேங்காய், முட்டை முதலியன) உண்டால் மாரடைப்பு வரும் என்று பல காலம் கூறி வந்தார்கள். ஆனால் இந்த ஆராய்ச்சியில் அதிக saturated fat உண்பதற்கும், மாரடைப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று முடிவுகள் வந்துள்ளன.
அது மட்டுமில்லாமல், அதிக saturated கொழுப்பு உண்பது பக்கவாதம் வருவதை தடுத்து பாதுகாப்பு கொடுக்கிறது என்றும் தெரிய வந்துள்ளது.
மேலும், அதிக கொழுப்பு உண்டவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம் குறைவதோடு , non cvd deaths (இரத்த குழாய் அடைப்பு தவிர்த்த மற்ற நோய்கள் – கான்சர், நிமோனியா, கிருமி தாக்கம் முதலியன) 30 சதவீதம் குறைவாக வருவதாகவும் தெரிய வந்துள்ளது.
கெட்ட கொலஸ்டிரால் என முத்திரை குத்தப்பட்ட ldl கொலஸ்டிரால், நிறைய saturated கொழுப்பு சாப்பிடும் நபர்களுக்கு அதிகமாக இருந்தாலும் கூட, அவர்களுக்கு இருதய நோய்கள் அதிகம் ஆகவில்லை என்று அப்பட்டமாக நிரூபணம் ஆகியுள்ளது.
மேலும், கொழுப்பு அதிகமாகவும் மாவுச்சத்து குறைவாகவும் உண்பவர்களுக்கு,
hdl எனப்படும் நல்ல கொலஸ்டிரால் அதிகம் இருப்பதாகவும், triglyceride குறைவாக இருப்பதாகவும், apo b/a1 விகிதம் குறைவாக இருப்பதாகவும்,triglyceride/hdl விகிதம் குறைவாக இருப்பதாகவும்
தெரியவந்துள்ளது.
எனவே ldl கொலஸ்டிரால் குறைக்க ஸ்டாட்டின் மாத்திரை தேவையா – இது அடுத்த மிகப்பெரிய கேள்விக்குறி.
மேலும், இருதய நோய்களுக்கு ldl கொலஸ்டிரால் பலிகெடா ஆகி, 20 வருடங்களாக அனைவருக்கும் ஸ்டாட்டின் மாத்திரைகள் வாரி வழங்கி கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த ஆராய்ச்சியில் என்ன கூறியுள்ளார்கள் என்றால்,
“ldl கெட்டது என்று முன்னர் வந்த முடிவுகள் பெரும்பாலும் ஐரோப்பா அமெரிக்க போன்ற பணக்கார நாடுகளின் ஒருதலைபட்சமான முடிவுகளே.”
“இந்தியா உட்பட பல நடுத்தர, ஏழை நாடுகளிலும் நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில் ldlக்கும் இருதய நோய்க்கும் பெரிதாக சம்பந்தம் இல்லை என்றே தெரிய வந்துள்ளது.”
“Ldl ஐ விட்டுவிட்டு, இருதய நோய்க்களுக்கு அதிக காரணமான மாவுச்சத்து – அதிலும் குறிப்பாக இனிப்பு சார்ந்த உணவுகள், கோதுமை, அரிசி, மைதா, தீனி வகைகள் – இவற்றை குறைப்பதிலும், ldl தவிர்த்து மேற்கூறிய மற்ற காரணிகளை நோக்கி கவனத்தை திருப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது”
என்று இந்த ஆராய்ச்சிக்கு முடிவுரை அளித்துள்ளார்கள்.
நம்பர், புள்ளி விவரம் எல்லாம் விடுங்க சார்,
கடைசியா என்ன சொல்ல வரீங்க,
“இன்னுமா புரியல, ஜாலியா பேலியோ பாலோ பண்ணுங்க பாஸ்!!!”
Dr. A. Arunkumar, MD(pediatrics), குழந்தை நல மருத்துவர், ஈரோடு.