eGFR என்றால் என்ன? உண்மையான சிறுநீரக பாதிப்பை எப்படி கண்டுபிடிப்பது?

வணக்கம்,

சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பரிசோதனைகளில் bun(blood urea nitrogen), urea, creatinine உடன் egfr கேட்பது வழக்கம்.

urea, creatinine, bun போன்ற அளவுகளில் ஏதாவது அதிகம் இருப்பது தெரிந்தால், உண்மையில் சிறுநீரகம் பாதிப்படைந்துள்ளதா என்று தெரிந்து கொள்ள egfr உதவும்.

Gfr என்றால் என்ன?

சிறுநீரகத்தின் வடிகட்டும் வேகத்தை தான் gfr, அதாவது, glomerular filtration rate என்று அழைக்கிறோம். 
Egfr என்றால் estimated gfr. உண்மையான gfr கணக்கீடு செய்வது கடினம். எனவே, சில பார்முலாக்கள் உதவியுடன் egfr கணக்கீடு செய்யப்படுகிறது.

eGFR எவ்வளவு இருக்க வேண்டும்?

நல்ல வடிகட்டும் திறனுடைய சிறுநீரகம் ஒருவருக்கு இருந்தால் egfr 60 எனும் அளவிற்கு மேல் இருக்க வேண்டும்.

(ஆரம்ப கட்ட சிறுநீரக செயலிழப்பு – ‘ஸ்டேஜ் 1 அல்லது 2’ இருக்கும்போது gfr 60க்கு மேல் இருந்தும் சிறுநீரக பாதிப்பு இருக்கலாம். அது தெரிய urine microalbumin, protein creatinine ratio போன்ற பரிசோதனைகள் தேவை).

eGFR 60க்கு குறைவாக இருந்தால் என்ன அர்த்தம்?

eGFR 60 எனும் அளவிற்கு கீழே இருந்தால், அதுவும் தொடர்ச்சியாக 3 மாதங்களுக்கு மேல் இருந்தால், ஒருவரது சிறுநீரகங்கள் சரியாக செயல்படவில்லை என்று அர்த்தம். அவருக்கு chronic kidney disease எனப்படும் சிறுநீரக செயலிழப்பு இருக்கிறது என்று அர்த்தம்.

ஏன் இதை கணக்கிட வேண்டும்?

பேலியோ பின்பற்றும் பலருக்கு சில நாட்களுக்கு பிறகு இரத்த பரிசோதனைகளில், bun அல்லது urea சிறிது அதிகம் ஆகி காணப்படும். உடனடியாக, பேலியோ உணவு உண்டு கிட்னி போய்விட்டது என்று பயந்து விடுகிறார்கள் சிலர்.

சிறுநீரகம் செயலிழப்பால் urea அல்லது bun அதிகம் ஆவது வேறு. சிறுநீரகம் செயலிழந்தவர்களுக்கு egfr 60 கீழ் இருக்கும்.
Urea , bun போன்றவை 100க்கு மேல் இருக்கும். Uremia போன்ற கடும் தொந்தரவுகளை ஏற்படுத்தும்.

புரத உணவு மூலம் urea அதிகம் ஆவது வேறு. இவர்களுக்கு egfr 60 மேல் இருக்கும். Bun, urea, 20-30 எனும் அளவுகளில் மட்டுமே இருக்கும். இதன் காரணம் அதிக urea உற்பத்தியே தவிர சிறுநீரக செயலிழப்பு இல்லை.

பேலியோ உணவுமுறையால் கிட்னி பாதிப்பு வராது என்பதை தெரிந்து கொள்ள இதையும் படியுங்கள். https://doctorarunkumar.com/paleo-lchf-diet/paleo-diet-renal-failure-kidney/

eGFR எப்படி தெரிந்து கொள்வது?

இது தனி இரத்த பரிசோதனை இல்லை.
லேபிற்கு போய் இதை எடுத்து பணம் விரையம் செய்ய தேவை இல்லை.
உங்கள் இரத்த பரிசோதனையில் creatinine அளவு இருக்கும். அதை குறித்து வைத்து கொள்ளுங்கள்.
கீழ்கண்ட இணைய முகவரிக்கு சென்று மேற்கூறிய அளவீடுகளை பதிவீடு செய்யுங்கள்.

http://www.calculator.net/gfr-calculator.html

முதலில் வரும் ‘IDMS-traceable MDRD study equation Result’ எனும் வாசகத்தில் காணப்படும் எண்ணை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் eGFR ரெடி.

eGFR 60க்கு மேல் இருந்தால், ஜாலியாக நடையை கட்டுங்கள். ஜோராக பேலியோ உணவு எடுங்கள்.

(பின் குறிப்பு: சர்க்கரை நோய் உள்ளவர்கள் மட்டும் urine microalbumin எனும் இன்னொரு பரிசோதனை செய்ய வேண்டும். ஏனெனில், அவர்களுக்கு egfr 60க்கு மேல் இருந்தாலும் கூட, urine microalbumin பாசிட்டிவ் இருந்தால், ஆரம்ப கட்ட ஸ்டேஜ் 1 அல்லது 2 சிறுநீரக செயலிழப்பு இருக்கிறது என்று அர்த்தம். அவர்கள் கீழ் கூறியது போல் பேலியோ எடுக்க வேண்டும்)

eGFR 60க்கு கீழ் இருந்தால், சிறுநீரக மருத்துவரிடம் சென்று ஆலோசனை செயுங்கள். நீங்கள் பேலியோ எடுக்கலாம். ஆனால், சிறிது மாற்றப்பட்ட, 60 கிராம் புரதத்திற்கு குறைவாக உண்ணும் முட்டையுடன் கூடிய சைவ பேலியோவுக்கு மாறிவிடுங்கள். சர்க்கரை நோய் போன்றவற்றால் உங்கள் சிறுநீரகம் மேலும் பாதிப்படையாமல் பேலியோ பார்த்துக்கொள்ளும்.

This Post Has 2 Comments

  1. Shree

    Doctor, make a video on low-pressure. It’s a kind request.

  2. ரூபி

    சிறுநீர் கழிக்கும் போது அரக்கு கலரில் வருவது ஏன் எனக்கு லிவர் fat உள்ளது.

Leave a Reply